என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம மக்கள் முற்றுகை"
- பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
- ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்டத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி 14 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் வாகே.சங்கேத் பல்வத் சான்றிதழ் வழங்கினர். மீதம் உள்ள மனுக்களுக்கு பரிசிலனை செய்து வழங்கபடும் என தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த 65 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாகேட்டு கடந்த 3 வருடமாக ஜமாபந்தியில் மனு அளித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறியும் இது வரை நடவடிக்கை இல்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதேபோல் பொன்னேரி அடுத்த காட்டவூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விடுபட்ட 16 பேருக்கு பட்டா வழங்க கோரியும் 66 பேருக்கு அசைமெண்ட் பட்டாவை கம்ப்யூட்டர் பட்டாவாக மாற்றியமைக்க கோரியும் பலமுறை ஜமாபந்தி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.
- சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர்
- ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சில பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வேலை வழங்கப்படாத 1, 2, 3 வார்டு பகுதிகளைச் சேர்ந்த ஆத்தூர் மேற்கு தெரு, வடக்குத்தெரு, வெள்ளாளர் தெரு, நாயுடு தெரு, கள்ளர் தெரு, ஆலம்பட்டி, அக்ரஹாரம் தெரு, மாலம்பட்டி, பத்திர ஆபிஸ் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர். தகவல் அறிந்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் மற்றும் ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது.
இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. பணிக்கு வராதவர்களுக்கு வேலைக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை பணிகளில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு இருக்கக் கூடாது என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
- சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என எம்.எல்.ஏ. கூறினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே எம்.குரும்பபட்டி, முத்து க்காமன்பட்டி, கருத்தாண்டி பட்டி, சென்னஞ்செட்டி பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகை யிட்டு அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.விடம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கோஷமிட்டனர். சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினாநாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யாகப்பன், ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் ராமன் மற்றும் கவுன்சிலர்கள் அங்கி ருந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மின்வாரிய ஊழியர்களும் வந்து மின் கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்றனர்.
- மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை பிடுங்கியவுடன் கிராமமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் தனியார் தேங்காய் நார்மில் தொழிற்சாலை சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும்.
இந்த தொழிற்சாலை செயல்பட்டு இதில் இருந்து வரும் கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தினர்.
அதைதொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி கிராமசபை கூட்டம் கூட்டி இந்த நார்மில் தொழிற்சாலைக்கு அனுமதி தரக்கூடாது என தீர்மானம் போட்டு கம்பெனி செயல்படுவதை தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர்.
இதற்கு இடையே நார்மில் தொழிற்சாலையில் புதிய மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் நட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இச்சிப்பாளையம் கிராம மக்கள் தேங்காய் நார்மில் தொழிற்சாலையை முற்றுகையிட்டு மின் கம்பம் நட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் தரப்பில் புதியதாக நடப்பட்ட மின் கம்பத்தை அகற்ற வேண்டும். இல்லையேல் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைக்குரிய இடத்தில் மின் கம்பம் நட்டது தவறு. உடனடியாக அகற்றிட வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மின்வாரிய ஊழியர்களும் வந்து மின் கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்றனர். நார்மில் முன்பு கூடியிருந்த கிராமமக்களிடம் போலீசார் பேசி அனைவரையும் கலைந்து போக செய்தார்கள். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை பிடுங்கியவுடன் கிராமமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- திட்டக்குடி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
- திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.
கடலூர்: திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார். இதுகுறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும் ஊராட்சி மன்ற தலைவர் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 7-ந் தேதி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்ட–த்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மாயவேல் 8-ந் தேதியே ஆக்கிரமிப்பை அகற்ற படும் என உறுதியளித்தார். ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மதியம் கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 12 ம் தேதி இன்று மாலை 6 மணிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். இதை யேற்று போராட்டக் காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணை, ஆலபாக்கம், பனபாக்கம், ஈன்றம்பாளையம், பேரண்டூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை செல்கிறது.
இந்த கிராமங்கள்வழியாக 6 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அளவிடும் பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சாலை பணியால் ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள், கிணறுகள், பம்ப் செட்டுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 6 வழிச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம் ஆகிய கிராமங்களில் நிலம் அளவிட அதிகாரிகள் வந்தனர்.
இதனை அறிந்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொளவேடு கிராமத்தில் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமங்களின் வழியாக 6 வழி சாலை அமைக்க விடமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திடீரென அவர்கள் பாலவாக்கம்- தொளவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.
கடந்த 8-ந் தேதி சென்னங்காரணை, ஆலபாக்கம் கிராமங்களில் அதிகாரிகள் இரவு நேரங்களில் அளவு கற்கள் நட்டியதை கண்டித்து கிராம மக்கள் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
எட்டயபுரம் தாலுகா சுரைக்காய்பட்டி பஞ்சாயத்து ரணசூரன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது. பின்னர் அதனை பழுது நீக்காமல், கிடப்பில் போட்டனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த மின் மோட்டாரை உடனே பழுது நீக்கி, சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் வேலுச்சாமி, கிளை செயலாளர் ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர் நடராஜன், நகர செயலாளர் முருகன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முற்றுகையிட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பழுதடைந்த மின் மோட்டாரை உடனே பழுது நீக்கி, சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே போலிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் டென்டர் விடப்பட்டது. அதன்படி ஏரியில் மணல் குவாரி அமைத்து மணல் எடுக்கப்பட்டது. 3 அடிக்கு மட்டுமே மணல் தோண்டி எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சுமார் 15 அடிவரை பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டு உள்ளதாக போலிவாக்கம் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் மணல் எடுத்த பள்ளத்துக்குள் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 15 அடிக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் 35 அடியில் தண்ணீர் வந்துவிடும்.
ஆனால் தற்போது 80 அடியில்தான் தண்ணீர் வருகிறது என்றனர். தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
வேடசந்தூர் அருகேயுள்ள குதுப்பணம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆழ்துளை கிணறு வறண்டு விட்டது. இதனால் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல்லுக்கு செல்லும் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் ஒரு திருகு குழாய் அமைக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் நடந்து சென்று அதில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு கொடுத்தனர். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தொட்டணம்பட்டியில் உள்ள நல்லமனார்கோட்டை ஊராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன், பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் சிக்கனன், விவசாய சங்க தலைவர் பிச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ளது நெடுங்குளம் கிராமம். இங்கு 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும்.
இந்த கிராமத்தை பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் டவுன் மின்வாரியத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெடுங்குளம் கிராமத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் மின் இணைப்பை, நடுவக்குறிச்சி கிராம மின்வாரிய தொகுப்பிற்கு மாற்ற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்குளம் கிராம மக்கள் சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் நடுவக்குறிச்சி கிராம மின் தொகுப்பிற்கு மாற்றி அமைக்க முயற்சி செய்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் டவுண் போலீசார் சென்று முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்ததை நடத்தி உரிய முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
சாத்தான்குளத்திலிருந்து விஜயராமபுரம், அடப்புவிளை, சாமிதோப்பு, திருப்பூர் மற்றும் தட்டார்மடம் வழியாக திசையன்விளைக்கு செல்லும் மெயின்ரோடு பழுதுபட்டதால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.
பழுதான இந்த ரோட்டினை சீரமைக்கக்கோரி அப்பகுதி கிராமமக்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தற்பொழுது நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் புதிதாக தார் ரோடு அமைத்துள்ளனர்.
விஜயராமபுரத்திலிருந்து போடப்பட்ட புதிய தார் ரோட்டின் இருபக்க வாட்டிலும் மணல் போட்டு நிரப்புவதால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சென்றால் இந்த பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால் இந்த கிராமங்கள் வழியாக கடந்த 3 மாத காலமாக பஸ்கள், வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டது.
இதனால் இப்பகுதி கிராமமக்கள் வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டதால் உடனே போடப்பட்ட புதிய தார்ரோட்டின் இரு பக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மணலால் நிரப்ப கோரியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு குடிதண்ணீர் கிடைத்திட ரோட்டோரம் போர் போட கோரியும் கிராமமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து விஜயராமபுரம், திருப்பூர் இதன் சுற்றுபுரத்திலுள்ள சுமார் 300-க்கு மேற்பட்ட கிராமமக்கள் சாத்தான் குளத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் செல்வராஜ், விஜயராமபுரம் சண்முகவேல் தலைமையில் முற்றுகையிட்ட ஆண்களும், பெண்களும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப், முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன் மற்றும் நிர்வாக பொறியாளர் உட்பட நெடுஞ்சாலைத்துறையினரும் கலந்து கொண்டனர்.
முடிவில் புதிதாக போடப்பட்ட ரோட்டின் இருபக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மூடியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க போர் போடுவது குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள், அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்